பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காளான் சாப்ஸ்

குழந்தைகளுக்கு காளானை இப்படிச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

News image
Updated On :19 செப்டம்பர் 2016, 12:20 pm

தவநிதி

தேவையானவை:

காளான்  - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிது
வெங்காயத்தாள் - 1
எண்ணெய் - 1 தேக்கரண்டி
துருவிய சீஸ் - அரை கிண்ணம்

செய்முறை:

காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர்,   குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி கூழானதும், நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். காளான் வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மல்லி தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கி ஒரு மூடிபோட்டு, அனலை குறைத்து வைத்து வேகவிடவும். தக்காளியில் உள்ள தண்ணீரிலேயே காளான் முழுவதுமாக வெந்துவிடும். (தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
காளான் மசாலா கலவையுடன் நன்கு கலந்து வரும்போது, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்துமல்லி தழை, வெங்காயத்தாளைத் தூவிவிட்டு கிளறி இறக்கவும்.  காளான் சாப்ஸ் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.