வாட்டர்மெலன் லாலிபாப், டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்!

குறைவான கலோரிகள் கொண்டது, காலை மற்றும் மாலை சிற்றுண்டி நேரங்களில் இதை எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமே என்ற கவலை தேவையே இல்லை.
வாட்டர்மெலன் லாலிபாப், டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்:

வாட்டர்மெலன்: 8 துண்டுகள்
கெட்டித் தயிர்/ பனீர் : 1/2 கப்
மிளகுத் தூள்: 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள்: 12 டீஸ்பூன்
பிளாக் சால்ட்: 1 டீஸ்பூன்
புதினா இலை/ செலரி: 1 கைப்பிடி 
சாப் ஸ்டிக்ஸ்: தேவையான அளவு

செய்முறை:

முதலில் 1/2 கப் கெட்டித் தயிரில் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கலக்கி ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்,  அல்லது பனீரை நிறம் மாறாத அளவுக்கு லேசாகப் பொறித்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பின் வாட்டர் மெலனை தோல், விதைகள் நீக்கி சுத்தமாக்கிக் கொண்டு ஃப்ரூட் கட்டர் கொண்டு நமக்கு பிடித்த டிசைனில் துண்டு போட்டுக் கொள்ளவும். உதாரணமாக பூ, ஸ்டார், டைமண்ட், இலை, கியூப்கள் இப்படி ஏதாவது ஒரு வடிவத்தில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். அது அவரவர் கற்பனைத் திறன் சார்ந்த விசயம். ஆனால் குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் கூட சாப்பிடத் தூண்டும் வகையில் வடிவம் இருக்க வேண்டும். அடுத்து அந்த வாட்டர் மெலன் துண்டுகளின் மீது சிறிதளவு பிளாக் சால்ட் தடவவும். பின் அதன் மீது முதலில் கலந்து வைத்த கெட்டித் தயிரில் ஒரு ஸ்பூன் எடுத்து கச்சிதமாக மேலே தடவவும், பின்னர் அதன் மீது ஃப்ரெஷ் ஆக ஒரு புதினா இலை வைத்து அழகு படுத்தி சாப் ஸ்டிக்கில் குத்தி வைத்து பரிமாறவும். இந்த வகை ஸ்நாக்ஸ் வெகு குறைவான கலோரிகள் கொண்டது என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலை மற்றும் மாலை சிற்றுண்டி நேரங்களில் இதை எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமே என்ற கவலை தேவையே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com