மதம் என்ற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும்? மறைந்த பத்திரிகையாளர் ‘சோ’ வின் விளக்கம்!

இதுவரை அப்படி உச்சரித்துப் பழகியவர்கள் இனி பொருளறிந்து மாற்றிக் கொள்ள இந்த விளக்கம் உதவலாம்.
மதம் என்ற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும்? மறைந்த பத்திரிகையாளர் ‘சோ’ வின் விளக்கம்!
Published on
Updated on
1 min read

இந்து matham என்பதை இந்து madham  என்று பலர் உச்சரிக்கக் கேட்டிருப்பீர்கள். அது தவறான உச்சரிப்பு என்கிறார் சோ ராமசாமி!

'madham' என்றால் அது வெறியைக் குறிக்கும். அதுவே 'matham' என்றால் அது நம்பிக்கை, சிந்தனையைக் குறிக்கும், அதே madham என்று உச்சரித்துப் பாருங்கள். அது வெறி! தமிழில் madham, matham இரண்டையும் குறிக்க ‘த’ என்ற ஒரு எழுத்து தான் இருக்கிறது. ஆனால் சமஸ்கிருதத்தில் அதுவே நான்கு விதமான ‘த’ க்கள் இருக்கின்றன. அவற்றை உச்சரிக்கும் போதே பொருள் விளங்கி விடும். தமிழில் அப்படியான வசதி இல்லாவிட்டாலும் நாம் அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதே தேவையான விதத்தில் திருத்தம் செய்து கொள்கிறோம். ஏனெனில் நமக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியும். உதாரணத்துக்கு (தண்ணீர்) Thanneer என்பதை Dhanneer  என்று நாம் உச்சரிக்க மாட்டோம். அப்படித் தான் ‘இந்து மதம்’ என்பதை இந்து matham என்று தான் உச்சரிக்க வேண்டும். இந்து madham  என்று உச்சரிக்கக் கூடாது. 

இதுவரை அப்படி உச்சரித்துப் பழகியவர்கள் இனி பொருளறிந்து மாற்றிக் கொள்ள இந்த விளக்கம் உதவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com