Enable Javscript for better performance
நான் அரசியலுக்காகச் சொல்லவில்லை, ஊடகங்களே தயவு செய்து இதை வெளியிடுங்கள்: வைகோ!- Dinamani

சுடச்சுட

  

  நான் அரசியலுக்காகச் சொல்லவில்லை, ஊடகங்களே தயவு செய்து இதை வெளியிடுங்கள்: வைகோ!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 01st March 2018 04:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vaiko

   


  ‘14 வயசுப் பையன் 6 வயசுப் பொண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணி, நாசம் பண்ணி கொன்னு போட்டு, மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டு புகை வருதுன்னு பள்ளிக்கூடத்துல போய் சொல்லியிருக்கான்... 14 வயசுப் பையன்! பாலியல் பலாத்காரத்துக்கு காரணம் என்னன்னு கேட்டதுக்கு அவன் சொன்ன பதில்,  ‘என் செல்ஃபோன்ல நான் ஆபாசப் படம் பார்ப்பேன்... அதனால செஞ்சேன்னு’ சொல்லியிருக்கான். நான் இந்த தொலைக்காட்சிகள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். நான் இதை அரசியலுக்காகச் சொல்லவில்லை. உங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக தயவு செய்து இதை வெளியிடுங்கள், நீங்கள் பதிவு செய்து கொண்டு போகிறீர்கள், உங்கள் தலைமை நிர்வாகம் இதை வெளியிட அனுமதிக்க வேண்டும். 

  தமிழ்நாட்டிலுள்ள தாய்மார்களே, தந்தைகளே... தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு செல்ஃபோன் வாங்கித் தராதீர்கள். அமெரிக்காவில் இண்டெர்நெட்டை ரூமுக்குள் போய் பார்க்க முடியாது எந்த வீட்டிலும். வரவேற்பறையில் தான் பார்க்கலாம். பிள்ளைகளைத் தனியாக இண்டர்நெட் பார்க்க விடமாட்டார்கள். ஆனால் இங்கே செல்ஃபோனில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்திக் கொண்டு மூன்று வயதுக் குழந்தை ஃபோட்டோ எடுப்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். ‘குழந்தை என்ன அழகாகப் ஃபோட்டோ எடுக்குது செல்ஃபீயில?! என்று பெருமையாகப் பேசுகிறார்கள். எனக்குப் பயமா இருக்கு. சின்னப்பிள்ளைகள் எல்லாம் நான் ஏர்போர்ட்டுக்குச் செல்லும் போது ‘தாத்தா, ஒரு செல்ஃபீ எடுத்துக்கலாமா?’ என்று கேட்கிறார்கள், அதைக் கண்டு நான் சந்தோசப் படவில்லை. இந்தக் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து ஐந்து, ஆறு வயது ஆகும் போது இந்தப் பசங்க யாராவது இதுல அந்தக் காட்சி பார்க்கலாம், இந்தக் காட்சி பார்க்கலாம் என்று சொல்லிக் கொடுத்தால் எங்கே போய் நிற்கும் இந்தத் தமிழ்நாடு? 

  14 வயசுப் பையன் நான் இதனால நாசம் பண்ணி கொன்னுட்டேன்னு சொல்றான். கூட வந்த 9 வயசுப் பையன் அந்தப் பொண்ணு கத்துனதும் பயந்து ஓடிப் போய் விட்டான், ஆனால் இந்த 14 வயசுப் பையன் கொன்னுட்டான், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது நல்லதல்ல,  ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிறுமியை அதே தெருவில் வசிப்பவன் அந்தப் பொண்ணு விருப்பம் தெரிவிக்கலைன்னு பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டான், அந்தக் குழந்தை இறந்து போச்சு, அவனைக் கைது பண்ணியிருக்காங்க, இது நடந்தது திருமங்கலத்துக்குப் பக்கத்துல நடுவக் கோட்டை என்ற கிராமத்துல. 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு பெண்பிள்ளைகளே பஸ்ஸுல இறங்கி ரோட்ல நடந்து கூட போக முடியாதுன்னா நம்ம தமிழ்நாடு எங்கங்க போகுது?! 

  இதுவரைக்கும் சென்னைல மட்டும் 1700 பேர் செல்ஃபோன்ல பேசிக்கிட்டே போய் ரயில்வே தடத்துல இறந்துருக்காங்க. இது போலீஸ் ரெக்கார்டு. பீகார்ல 6 பிள்ளைங்க செல்ஃபோன் பேசிட்டே போய் ரயில்ல அடிபட்டு இறந்திருக்காங்க. இதுவும் ரொம்ப வேதனையா இருக்கு. நான் இப்ப வரும்போது பார்க்கறேன். அவ்ளோ வாகனங்கள் போய்க்கிட்டே இருக்கு, ஒரு அம்மா செல்ஃபோன் பேசறதை நிறுத்தாம கை காமிச்சு வாகனங்களை ஓரமா ஒதுங்கச் சொல்லி சைகை பண்ணிட்டு போயிகிட்டே இருக்காங்க. கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்தானா? இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா, இப்ப பிறந்ததுமே காதுல செல்ஃபோன் மாட்டிடறாங்க. இது நல்லதில்லைங்க.

  தமிழ்நாட்டுத் தாய்மார்களே, தந்தைமார்களே உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து செல்ஃபோன் வாங்கிக் கொடுக்காதீங்க!

  வைகோவின் வேண்டுகோளை காணொலியாகக் காண...

   

  பிள்ளைகள் வருத்தப்படும்னு அவங்க கேட்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறதா? கண்டிச்சு வளர்க்கிறதில்லையா? குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கிறது என்ன பழக்கம். அப்படி வாங்கித் தரலைன்னா பிள்ளைகள் கோவிச்சுக்கிறாங்க... வயலண்ட்டா பிஹேவ் பண்றாங்க. நான் ஏர்ப்போர்ட்ல பார்க்கறேன், ஃபிளைட்ல பார்க்கறேன் குழந்தைங்க என்னமா சண்டை போடறாங்க அவங்க பெற்றோர்கள்கிட்ட. இதெல்லாம் தமிழ்நாட்டில் சமூகப் பிரச்னை மட்டுமில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்னையும் கூட.

  Image courtesy: the malaysian times. Nakkheeran TV

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai