பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சக ஊழியர்களுடான நட்பு வளர வேண்டுமா?

ஒரு தனிநபர் சக ஊழியர்களுடான தொடர்பு, இணக்கமான உறவாக மாறும்போது மனநிறைவு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

Published On :

ஒரு தனிநபர் சக ஊழியர்களுடான தொடர்பு, இணக்கமான உறவாக மாறும்போது மனநிறைவு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

தனிநபர்கள் எவ்வாறு பணிபுரிய சக ஊழியர்களுடான மனநிறைவு உண்டாகும். மேலும் இந்த தொடர்பு, உறவுகளின் தரத்திற்கு எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பணியிடத்தில் மனநிறைவோடு வேலைசெய்யும் மேலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் 30 முறையான நேர்காணல்களை ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். மேலும் பணியிடத்தில் மனநிறைவு கொள்கைகளைப் பயன்படுத்தும் பல்வேறு நபர்களுடன் 50-க்கும் மேற்பட்ட முறைசாரா நேர்காணல்களை நடத்தினர்.

நேர்காணல் செய்பவர்கள் பணியிடத்தில் அவர்களின் மனநிறைவை கொண்டுவருவதற்கான முயற்சிகள், அவர்களின் சக ஊழியர்களால் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக  ஆரம்ப ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் சிக்கலானவை என்பதை மனநிறைவானது நமக்கு நினைவூட்டுகிறது என்று ஆராயச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வின் முடிவில், சக ஊழியர்கள் தகவல் தெரிவிப்பவர்களாக மட்டும் அல்லாமல்,   தொடர்பு கொள்ளும் வகையில் பேசும்போது, உரையாடல் விரிவடைந்து தொடர்புத் தன்மை மற்றும் மென்மையான உறவு இருக்கும். இவை செயல்திறனுக்கு உதவும்.

சக ஊழியர் சிறப்பாக செயல்பட்டால் பாராட்டுதல் வேண்டும். ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை பாராட்டி அங்கீகரிக்கும் போது தான், உண்மையில் சிறப்பாக இணைந்து பணியாயாற்ற வழி செய்கிறது என்று கண்டறிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.