கோடைக் காலம்...உடல் எடையைக் குறைக்க சரியான நேரம்!

கோடைகாலம் வந்துவிட்டது. மற்ற நேரங்களைக் காட்டிலும் உடலில் நீர்ச்சத்து குறையும் நேரம் இது. உணவுப் பழக்கவழக்கங்களையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும்.
கோடைக் காலம்...உடல் எடையைக் குறைக்க சரியான நேரம்!

கோடைகாலம் வந்துவிட்டது. மற்ற நேரங்களைக் காட்டிலும் உடலில் நீர்ச்சத்து குறையும் நேரம் இது. உணவுப் பழக்கவழக்கங்களையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும்.

கோடைக் காலத்தில் இயற்கையாகவே உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதிகமாக தண்ணீர், பழச்சாறு குடிக்க வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் எளிதாகக் குறைக்கலாம். 

உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள், தண்ணீர் அதிகமாக அருந்துதல், லேசான உடற்பயிற்சி மூலமாக எளிதாக உடல் எடையைக் குறைக்கலாம். அதற்கு இந்த கோடைக் காலம் உங்களுக்கு எளிதாகக் கை கொடுக்கும். 

♦ முதலில் அதிக கொழுப்புடைய பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

♦ அடுத்ததாக, எலுமிச்சை சாறு, பழச்சாறுகள், நீர் ஆகாரங்கள் ஆகியவற்றை அதிகம் அருந்த வேண்டும். சத்தான பழங்களை சாப்பிடுங்கள். 

♦ மதியம் ஒருவேளை மட்டும் அரிசி உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் குறைந்த கலோரி கொண்ட உணவைச் சாப்பிடவேண்டும். 

♦ உடல் சூட்டைக் குறைக்கும் இளநீர், பதநீர் உள்ளிட்ட பானங்களை அருந்துங்கள். 

♦ காலையில் எழுந்து குறைந்தது ஒரு அரை மணி நேரம் நடப்பது, ஓடுவது, சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுங்கள். கோடையில் உடல் கொழுப்பை கரைக்க குறைந்த நேரம் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. 

♦ உடற்பயிற்சிக்கு முன்னதாக 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்த வேண்டும் அல்லது எலுமிச்சை நீர், இலவங்கப்பட்டை நீர் அருந்திவிட்டு உடற்பயிற்சி செய்தல் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும். 

♦ பழங்கள், மோர், கோடை கால பழங்களான தர்பூசணி, கிர்ணி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோன்று மதியத்திற்கு பின்னர் வெஜிடபிள் சூப் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

♦ பாதாம், பிஸ்தா, வால்நட் ஆகிய நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். 

♦ டீ, காபியைத் தவிர்த்து பிளாக் டீ, மூலிகைத் தேநீர் ஆகியவற்றை அருந்தலாம். 

மேற்குறிப்பிட்ட இந்த சில மாற்றங்களை  மட்டும் செய்தாலே போதுமானது. ஒரு சில வாரங்களிலேயே மாற்றத்தை நீங்கள் உணர முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com