'டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை'

டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
'டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை'

டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களின் ஒன்று டயப்பர். வெளியில் செல்லும்போதும், இரவு தூங்கும்போதும் குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்துவிட்டால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைப் போக்க பெரும்பாலான பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

டயப்பர் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது குறித்து ஒருபுறம் ஆய்வு நடக்கிறது. சிறுநீர் கழித்த அந்த ஈரத்திலேயே குழந்தைகள் இருப்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன; சிறுநீர், மலம் கழிக்கும் இடத்தைச் சுற்றி தோல் அரிப்பு ஏற்படுகிறது.. இவ்வாறு பல பிரச்னைகள் இருக்கின்றன. 

இந்நிலையில் டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் நர்சிங் பள்ளி சமீபத்தில் குழந்தைகளுக்கு டயப்பர்கள் பயன்படுத்துவது குறித்து பெற்றோரிடம் ஆய்வு மேற்கொண்டது. 

'ஜர்னல் ஆஃப் டெவலப்மெண்டல் பிஹேவியரல் பீடியாட்ரிக்ஸ்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

குழந்தைகளின் டயப்பர் தேவைக்கும் தூக்கத்திற்கும் இடையிலான உறவு  ஆய்வு செய்யப்பட்டது. 

'குழந்தைகளுக்கு தூக்கம் மிக அவசியம்; தூக்கம் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது; கற்றல் மற்றும் நினைவகத்தை உறுதிப்படுத்துகிறது; நல்ல தூக்கம் கொண்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது குறைவு. தூக்கம் இல்லை எனில் உடல் பருமன், நடத்தை மாற்றங்கள் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகம்' என்கிறார் ரட்ஜர்ஸ் நர்சிங் பள்ளியின் இணை ஆசிரியர் சாலி போர்ட்டர். 

3 வயது மற்றும் அதற்கும் குறைவான குழந்தைகளின் 129 பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 'டயப்பர்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. ஆனால், மாதம் முழுவதும் பெற்றோர்களால் டயப்பர் வாங்க முடிவதில்லை. 76% குழந்தைகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது டயப்பர் இல்லாமல் இருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் மாதத்தில் ஒருமுறை டயப்பர் இல்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 47 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து கவலை கொண்டிருந்தனர்.

டயப்பர் வாங்குவதற்குப் போராடும் நடுத்தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் தூக்கத்தில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், டயப்பர்கள் இல்லை என்றால் குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது என்று பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். அமெரிக்க தாய்மார்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் டயப்பர்களை வாங்குவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்' உள்ளிட்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

மேலும், டயப்பர் பயன்பாட்டினால் தோல் எரிச்சல், சிறுநீர் பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு டயப்பர் தேவைதான். ஆனால், வெளியில் செல்லும்போதும் அவசியமாகத் தேவைப்படும்போதும் மட்டும் அவற்றை பயன்படுத்தலாம். மாறாக, மற்ற வீட்டில் இருக்கும் நேரங்களில் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com