வாழ்க்கையை எளிதாக்கும் அற்புத சாதனங்கள்.. தெரிந்துகொள்வோமா?

காயங்கள் ஆறுவதை கண்காணிக்கும் பான்டேஜ் முதல், உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடல் எந்த அளவுக்கு நீரிழப்பை சந்திக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் சாதனம்
செயற்கை நுண்ணறிவு தலையணை
செயற்கை நுண்ணறிவு தலையணை
Published on
Updated on
1 min read


காயங்கள் ஆறுவதை கண்காணிக்கும் பான்டேஜ் முதல், உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடல் எந்த அளவுக்கு நீரிழப்பை சந்திக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் சாதனம் வரை ஏராளமான செயற்கை நுண்ணறிவு கொடுத்த அற்புதங்கள் வந்துவிட்டன.

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ஏராளமான உடல்நலன் சார்ந்த சாதனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டன. உங்கள் தூக்கத்தை சிறப்பானதாக மாற்றும் ஹீட்பேன்ட் கூட இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். அதனை தொடர்ந்து கண்காணித்து, ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்யும் ஏராளமான செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் நாள்தோறும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கும் வந்துகொண்டேதான் இருக்கிறது.

அதில் ஒரு சில சாதனங்களைப் பற்றியாவது நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
தானாகவே வடிவமைத்துக் கொள்ளும் தலையணை
உறங்கும் போது கட்டியணைத்துக் கொண்டு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் தலையணையைத் தாண்டி, வழமையான தலையணையைப் போலவே, ஆனால், ஒருவரின் குறட்டையைக் குறைக்கும் வகையில் தானே அளவை வடிவமைத்துக் கொள்ளும் தலையணை வந்துவிட்டது.

மோஷன் பிள்ளோ என்று அழைக்கப்படும் அதில் ஸ்மார்ட் சென்சார் உள்ளது. அது, தலை மிகவும் வசதியாக இருக்கும் வகையில் தானே அளவை திருத்திக் கொள்ளும்படியாக அமைந்துள்ளது. அதில் உறங்குபவர் தலையை திருப்பும் போது அதற்கேற்ப தன்னை அது மாற்றிக் கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. இது தற்போது ரூ.54,000க்கு கிடைக்கிறது.

இது வாட்ச் இல்லை வாட்ச் மாதிரி
டைம்லெஸ் டைம்பீஸ் என்று கூறப்படும் வாட்ச் போன்ற ப்ரேஸ்லெட்டை நோவாட்ச் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. நோவாட்ச் நிறுவனத்தின் நிறுவனர் ஹைல்கே முன்டிங்கா, தனது நண்பர்கள் பலரின் மரணத்துக்குப் பிறகு இந்த கடிகாரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இது வெறும் வாட்ச் அல்ல, நீங்கள் இன்று எத்தனை முறை நடந்தீர்கள், மன அழுத்தம், உறக்க நேரம் என எல்லாவற்றையும் கணக்கிட்டுச் சொல்லுமாம். இது எந்த செல்லிடப்பேசியுடனும் இணைத்துக் கொண்டு தகவல்களை பெற முடியும். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.41,000க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com