தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சர்வதேச அன்னையர் நாள் எப்போது?

அன்னையர் நாள் எப்போது என்பது பற்றி

News image

அன்னையர் நாள் - ENS

Updated On :28 ஏப்ரல் 2026, 1:06 pm

உலகெங்கிலும் அன்னையர் நாள், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் நிச்சயம் அதற்கான தேவை குறைவுதான். காரணம். நாள்தோறும் அம்மாவுடன் அன்பு பாராட்டும் மக்களே நம் நாட்டில் அதிகம்.

எனவே, அம்மா மீதான அன்பைச் சொல்ல ஒரு குறிப்பிட்ட நாள் தேவையில்லை என்றபோதிலும், உலகெங்கும் கொண்டாடும் பல கொண்டாட்ட நாள்களைப் போலவே, இந்த அன்னையர் நாளும் இந்தியாவில் தற்போது கொண்டாடத் தொடங்கி விட்டார்கள்.

அவ்வப்போது அவர்களுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால்ம் அன்னையர் நாளில் நிச்சயம் அதனை செய்யலாம்.

இந்த ஆண்டு அன்னையர் தினம் எப்போது? என்று கேட்பவர்களுக்கு பதில்.. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதும், இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அன்னையர் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னையர் தினம் தேசிய நாளா அல்லது சர்வதேச நாளா என்பதில் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. நிச்சயமாக இது சர்வதேச அன்னையர் நாள்தான். பொதுவாகவே இதுபோன்ற கொண்டாட்ட நாள்களுக்கு ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அவர்களது கலாசாரத்துக்கு ஏற்ப ஒரு நாளைக் கொண்டாடுவது வழக்கம்.

வழக்கமாக, இந்தியா தவிர்த்து இந்த அன்னையர் நாளை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.

Summary

When is Mother's Day? History and celebration ideas!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.