இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கான அறிவுரைகள்...

parenting

கோப்புப் படம் - ENS

Updated On :

குழந்தை வளர்ப்பு என்பது இப்போது பெற்றோர்களுக்கு கடும் சவாலாகிவிட்ட நிலையில் குழந்தைகளும் சில சவால்களை எதிர்கொள்கின்றனர்.

நகரங்களில் வசிக்கும் குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் உள்ள குழந்தைகள், ஒருவித தனிமையை உணர்கிறார்கள். தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

குழந்தைகள் தங்கள் வீட்டில் மதிப்புமிக்கவர்களாக, அதாவது தங்கள் மீது பெற்றோரின் கவனிப்பு இருக்கிறது என்று உணர்வதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில செயல்களை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அரவணைப்பு

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய மறக்கலாம், இன்று என்ன சாப்பிட்டோம் என்று மறக்கலாம், ஆனால் பெற்றோர்கள் தங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்கிறார்கள், அது அவர்களின் மனதில் ஆழமானதாக பதிகிறது. குழந்தைகள் பெரிய பரிசுப் பொருள்களை விரும்புவதைவிட பெற்றோரின் அரவணைப்பையே விரும்புவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைகளுக்கான நேரம்

தினமும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் பேச வேண்டும். அவர்களுக்கு என நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் கதையைக் கேட்க வேண்டும். அதிலும் குழந்தைகளின் கண்ணைப் பார்த்து பேசுவதுடன் அவர்களின் பேச்சுக்கு அல்லது கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும்.

இன்று பள்ளி வகுப்புகள் எப்படி இருந்தன? நண்பர்களிடம் என்ன பேசினாய்? என்ன விளையாடினாய்? என சிறிய சிறிய விஷயங்களைக்கூட கேட்கலாம்.

இதுபோன்ற சிறிய சிறிய விஷயங்களைக் கேட்கும்போது குழந்தைகள் மகிழ்ச்சியடைவதுடன் அவர்கள் தங்களை மதிப்புமிக்கவர்களாக உணர்வார்கள். குழந்தைகள் வளர்ப்பில் இது மிகவும் முக்கியம் என்று ஐ.நா. குழந்தைகள் நல நிதி அமைப்பு கூறுகிறது.

பாராட்டு தேவை

உங்கள் குழந்தைகள் செய்யும் சிறிய சிறிய விஷயங்களை, சாதனைகளைப் பாராட்டுகள். ஒருவேளை குழந்தைகள் முயற்சி செய்து தோல்வியடைந்தாலும் 'நல்ல முயற்சி' என்று பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். பெற்றோர், பெரியவர்களின் பாராட்டு குழந்தைகளுக்கு அவசியம் தேவை.

பழக்கவழக்கம்

ஒரு பழக்கவழக்கத்தை தினமும் பின்பற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்வது, இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிது நேரம் குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசுவது, வாக்கிங் அழைத்துச் செல்வது என குழந்தைகளுக்குப் பிடித்த அதேநேரத்தில் ஆரோக்கியமான ஒரு பழக்கவழக்கத்தை தினமும் பின்பற்றுங்கள்.

வீட்டில் பங்கு எடுக்கச் செய்வது...

உங்கள் வீட்டில் வீட்டை அலங்கரிக்கும்போதும், வீட்டிற்குத் தேவையான குழந்தைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கும்போது அவர்களின் கருத்துகளைக் கேளுங்கள். முடிந்தவரை அதை ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்யுங்கள். குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் வயதுக்கு ஏற்ற பொறுப்புகளையும் அவர்களுக்கு வழங்குங்கள்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு பொறுப்பு கிடைக்கிறது. அவர்களும் அதை நிர்வகிக்கப் பழகுவார்கள். அவர்களும் தங்களை வீட்டின் ஒரு அங்கமாக உணர்வார்கள். வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தி அதைச் செய்யவைத்து பாராட்டுங்கள்.

நடவடிக்கைகளைக் கவனிப்பது...

ஆசிரியர்களிடம் தொடர்ந்து தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் தனிமையை உணர்கிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆசிரியர்களும் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

போன் வேண்டாம்!

குழந்தைகள் அதிகமாக போன் பயன்படுத்தினால் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதேநேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பலரும் போனில் ரீல்ஸ் பார்க்கின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும்.

எந்தவொரு பெற்றோரும் ஒவ்வொரு நாளும் முழுமையான பெற்றோராக குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்றாலும் அவர்களுடன் முடிந்தவரை நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

குழந்தைகள் சிறிய வயதில் வளரும் சூழல்தான் பெரியவர்கள் ஆகும்போது அவர்களைப் பக்குவப்படுத்தும்.

Summary

Do you want your children to be happy? What should parents do?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.