பல்லி கன்னத்தில் விழுந்தால் என்ன ஆகும்?

சில பெண்களுக்கு பல்லி என்றாலே ஒரே பயம். அதை விரட்டும் வரை நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
பல்லி கன்னத்தில் விழுந்தால் என்ன ஆகும்?

சில பெண்களுக்கு பல்லி என்றாலே ஒரே பயம். அதை விரட்டும் வரை நடுங்கிக் கொண்டிருப்பார்கள். நம்முடைய வீட்டை நமக்கே தெரியாமல் ஷேர் செய்து வாழும் ஜீவன்கள் அவை. பெரும்பாலும் சுவரில் திரிந்து கொண்டிருக்கும். வெகு அபூர்வமாக தரை இறங்கியும் வரும். மர பல்லி, வீட்டு பல்லி, காட்டு பல்லி,  சாலமாண்டர் எனும் அரிய வகைப் பல்லி என பல்லியில் பல வகைகள் உண்டு. 

ஜோதிட புராணங்களின் படி பல்லி கேதுவை குறிக்கிறது. ஸ்வரபானு எனும் அசுரனின் உடல்தான் கேது. அவனுடைய தலையை மகாவிஷ்ணு வெட்டினார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலிலும் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்திலும் பல்லியின் உருவம் தங்கத்திலும் வெள்ளியிலும் உத்திரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் வணங்கிச் செல்வார்கள்.

நம் வீட்டில் சர்வ சாதாரணமாக நம் சக ஜீவியாக வாழும் இந்தப் பல்லியை குறித்து சாஸ்திரமே உள்ளது. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பட்சி சாஸ்திரம், பல்லி விழுதலின் பலன்கள் போன்றவற்றையும் பார்க்கத் தவறுவதில்லை. பஞ்சாங்கத்தில் கவுலி என்றழைக்கப்படும் இந்தப் பல்லி கத்துவது முதல் நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதற்குரிய பலன்களைப் பட்டியல் இட்டுள்ளார்கள்.

பல்லி தலையில் விழுந்தால்...

பல்லி ஒருவரின் தலையின் இடது பக்கம் விழுந்தால் கலகம் ஏற்படும், இடது பக்கம் விழுந்தால் துன்பம் ஏற்படுமாம். அவருக்கு ஏற்படவிருக்கும் துன்பியல் சம்பவத்திற்கு ஏற்ப மனத்தை முன்னதாகவே தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு விழுகிறது. பல்லி தலையில் விழுவதற்கு பதிலாக தலைமுடியின் மீது விழுந்தால் பாதிப்புக்கள் அதிகமிருக்காது.

முகப் பகுதியில் விழுந்தால்...

ஒருவரின் நெற்றியில் பல்லி விழுந்தல் பெரும் புகழும் லட்சுமி கடாட்சமும் ஏற்படும். புருவத்தில் விழுந்தால் பெருந்தனக்காரர்களிடமிருந்து உதவி கிடைக்கும். கன்னம் அல்லது கண்களீல் விழுந்தால் பிரச்னை ஏற்படும். முகத்தில் பல்லி விழுந்தால், உறவினர் வருகை தருவார்கள். 

காதுகளில் விழுந்தால்...

இடது காதில் விழுந்தால் லாபம் ஏற்படும், அதுவே வலது காதில் பல்லி விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

தோள்கள் மற்றும் கைகளில் விழுந்தால்...

இடது தோலின் மீது பல்லி விழுந்தால் வெற்றி கிடைக்கும். வலது தோள்களின் மீது விழுந்தாலும் வெற்றிதான். இடது கையின் மீது பல்லி விழுந்தால் மனத்துக்கு உகுந்த சம்பவங்கள் நடக்கும். அதுவே வலது கை என்றால் உடல் நலம் பாதிக்கப்படும். வலது மணிக்கட்டில் விழுந்தால், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். மார்பில் பல்லி விழுந்தால் லாபம் மற்றும் சுபம் ஏற்படும்.

கால் பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்...

கால் பாதத்தில் பல்லி விழுந்தால் விரைவில் பயணம் செய்ய வாய்ப்பு உருவாகும். பிறப்புறுப்பின் மீது பல்லி விழுந்துவிட்டால் துன்பம் ஏற்படும். பணக் கஷ்டம் நேரும். அதே பிருஷ்டத்தில் விழுந்தால் பண வரத்து அதிகரிக்கும்.

தொப்புள், தொடையில் விழுந்தால்...

தொப்புளில் பல்லி விழுந்துவிட்டால் விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் கிடைக்கும். பல்லியானது தொடையில் விழுந்தால் பெற்றோருக்கு மனவருத்தம் ஏற்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com