‘தினமணியும் நானும்’
நான் இலங்கையிலுள்ள முன்னணி தமிழ் பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்றான தினக்குரலில் சுமார் 20 வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளேன். இதில் 15 வருடங்களாக நாடாளுமன்ற செய்தியாளராகவும் உள்ளேன். அத்துடன் தினமணியின் நீண்டகால வாசகனாகவும் உள்ளேன். தினமணி 85 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி.
எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கு தினமணியும் ஒரு பிரதான காரணம், அதற்கு முதலில் பிரதம ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். இலங்கையில் உள்ள ஊடகவியலாளன் ஒருவனுக்கு தமிழ் நாட்டிலுள்ள தினமணி எப்படி உதவியது என நீங்கள் நினைக்கலாம். நான் 20 வயதில் தினக்குரல் ஊடாக பத்திரிகைத்துறையில் பயிற்சி பத்திரிகையாளராக காலடி எடுத்து வைத்த போது அப்போது செய்தி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இருந்த வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை நீ சிறந்த தொரு ஊடகவியலாளராக வேண்டுமானால் செய்திகள் ,கட்டுரைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதிப்பழகிக் கொள், அவ்வாறு எப்படி எழுதுவதென்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால் தினமணியில் வெளிவரும் செய்திகள் ,,கட்டுரைகளை தினமும் படி, என்பது தான்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் தினமணியை இணையமூடாக தினமும் படித்துவிடுவேன். [ஏனெனில் கொழும்பில் தினமணியை ஒரு சில இடங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்] அதிலும் ஆசிரியர் தலையங்கங்களை ஒரு நாளும் தவற விட்டது கிடையாது.ஒரு சிறு பத்திக்குள் ஒரு பாரிய விடயத்தை ஆசிரியர் அலசியிருக்கும் விதம் அற்புதம் ,ஆச்சரியம். ஒரு நாட்டின்,.ஒரு இனத்தின் பிரச்சினைகளைக்கூட இவ்வளவு சிறிய பத்திக்குள் காத்திரமாக கூறிவிட முடியுமென்பதை தினமணி ஆசிரியர் தலையங்கமூடாகவே நான் கற்றுக்கொண்டேன். அதிலும் இலங்கை தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கங்கள் இங்குள்ள நாம் கூட சிந்திக்காத ,வகையில் அமைந்திருப்பதை பார்த்து,படித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் பல அதனால். தினமணி ஆசிரியர் தலையங்கங்களை எமது பத்திரிகையில் நாம் பல தடைவைகள் நன்றி தினமணி என்ற குறிப்புடன் மறு பிரசுரம் செய்துள்ளோம்..
அடுத்ததாக தினமணியில் வெளிவரும் கட்டுரைகள் .வடிகட்டியெடுக்கப்பட்டுள்ளவையாகவே உள்ளன. எமது ஈழத்தமிழர் பிரச்சினைகளைக் கூட எமது எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள் எழுதுவதை,அலசுவதை விட ஆழம்மிக்க தாக தினமணி கட்டுரைகள் அலசி,ஆராய்வதை சொல்லியேயாக வேண்டும். அதனால் எமது பத்திரிகையை தினமணி கட்டுரைகள் பல தடைவைகள் அலங்கரித்துள்ளன.அடுத்ததாக தினமணியில் அரசியல் பயில்வோம் எனும் பகுதி மிகவும் பெறுமதிமிக்கது.கண்டிப்பாக இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பகுதி அது.
தற்போதைய போட்டிமிகு ஊடகத்துறையில் நிமிடத்துக்கொரு பரபரப்பு செய்திகளை உண்மை ,பொய்களை அறியாது,தெரியாது வெளியிட்டு நாட்டையும் மக்களையும் குழப்புவோர் மத்தியில் தினமணி மிகவும் தள்ளி நிற்பது பாராட்டுக்குரியது.விளம்பர யுக்திகள்,வாசகர்களை கவரும் தந்திரமென அச்சு.இலத்திரனியல் ஊடகங்கள் தறிகெட்டு நடக்கும் இக்கால கட்டத்தில் தினமணி இவற்றுக்கு விதி விலக்காக உண்மை.நேர்மை,தெளிவு என்ற வழித்தடத்தில் பயணிப்பதனால் தினமணியின் ஓசை இன்னும் பல சந்ததிகளுக்கு கேட்கும்.
நன்றி
பாலசுப்ரமணியம் கிருபாகரன்
பிரதி செய்தி ஆசிரியர்,
தினக்குரல்.
கொழும்பு.
படம்: சித்தரிப்பு.
Related Article
‘தினமணியும் நானும்’ - வாசகர் நடராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்!
‘தினமணியும் நானும்’ - தினமணியுடனான உங்களது அனுபவங்களைப் பகிர ஒரு வாய்ப்பு!
உங்கள் தினமணிக்கு இன்று 85 வது பிறந்தநாள்!
‘டி.எஸ் சொக்கலிங்கம் முதல் கே. வைத்தியநாதன் வரை’ தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் ஒரு பார்வை!
அன்றொரு நாள்... தினமணி பிறந்த கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


