சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ரெடி ஸ்டெடி போ’ மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜில் ஜங் ஜக்’ எனும் இரு நிகழ்ச்சிகளைத் தடை செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைப்பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்பில் தெரிய வந்த நிஜம்...
மக்களில் ஒருசாரர் ரியாலிட்டி ஷோக்கள் நமது கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையெல்லாம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மக்களையும், இளைய தலைமுறையினரையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்கச் செய்யும் விதத்திலான நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து அவற்றையே ஒளிபரப்ப வேண்டும் என்பதாகவும், வீண் வேடிக்கைக்காக நமது கலாசாரத்தை கேலி செய்யும் விதத்தில் அல்லது பண்பாட்டுக்கு ஒத்து வராத விதத்தில் அயல் மாநில நிகழ்ச்சிகளை காப்பி அடித்து அதை அப்படியே இங்கே பரப்பி விட்டு வெற்றுப் புகழ் தேடுவதாக இருக்கக் கூடாது என்பதாகவும் இருந்தது.
கருத்துக் கணிப்பில் சிலர்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறும் பொழுது போக்குக்கானவை. அவற்றை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமே தவிர அவற்றை அப்படியே பின்பற்ற நினைக்கக் கூடாது. அவற்றில் அப்படியொன்றும் ஆபாசமாக இல்லை. சும்மா எதையோ நினைத்துக் கொண்டு எதையோ தடை செய்யச் சொல்லக் கூடாது. தடை செய்தால் மட்டும் நம் நாட்டில் கலாசாரம், பண்பாட்டு சீர்கேடுகள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது நன்மையும்ம், தீமையும். தீய எண்ணத்துடன் பார்த்தால் நல்லவை கூட தீயவையாகவே கண்ணில் படும். அதற்கென்ன செய்வது? என்கிறார்கள்.
ஆண்களில் சிலரோ, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு சேனல் இருக்கிறது. அவற்றை முதலில் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு செய்தியையும் அவரவர் சுயநலங்களுக்கு ஏற்றார் போல அவர்கள் இட்டுக் கட்டி சொல்லுகிறார்கள். பாரபட்சமாக இருக்கிறது. இதை முதலில் தடை செய்ய வேண்டும். என்றார்கள்.
பெண்களில் பலர் ஆச்சர்யகரமாக மெகா சீரியல்களைத் தடை செய்ய வேண்டும் என்றார்கள்.
கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒருங்கிணைப்பு: திவ்யா தீனதயாளன்
ஒளிப்பதிவு: ராகேஷ்
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி
Related Article
மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? நிஜம் எது? கட்டுக்கதை எது?
‘தி கிரேட் காளி’ யைக் கேலி செய்கிறதா இந்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்!
முதல்ல ரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்! (காணொளி)
அந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம்! சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்?
இந்த உலகத்துல பேய் இருக்கா? இல்லையா?! நீங்க நம்பறீங்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

