மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஒட்டகம் மீனாட்சி உடல் நலக் குறைவால் புதன்கிழமை இறந்தது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. மூத்த பெண் ஒட்டகம் மீனாட்சியும், இளைய ஒட்டகம் சிவாவும் கோயில் திருவிழாக்களின்போது மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியின் அலங்கரிக்கப்பட்டு, பவனி வருவது வழக்கமாகும். ஆவணி மூலத் திருவிழாவில் கூட இரு ஒட்டகங்களும் சுவாமி, அம்மன் உலா நிகழ்ச்சிகளில் வலம் வந்தன. இந்த நிலையில், மூத்த ஒட்டகம் மீனாட்சிக்கு கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை ஒட்டகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். வலையங்குளம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் ஒட்டகம் நல்லடக்கம் செய்யப்படுமென திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


