இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஸ்ரீமீனாட்சியம்மன் கோயில் ஒட்டகம் இறப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஒட்டகம் மீனாட்சி உடல் நலக் குறைவால் புதன்கிழமை இறந்தது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:45 am IST

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஒட்டகம் மீனாட்சி உடல் நலக் குறைவால் புதன்கிழமை இறந்தது.

  அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.  மூத்த பெண் ஒட்டகம் மீனாட்சியும், இளைய ஒட்டகம் சிவாவும் கோயில் திருவிழாக்களின்போது மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியின் அலங்கரிக்கப்பட்டு, பவனி வருவது வழக்கமாகும்.  ஆவணி மூலத் திருவிழாவில் கூட இரு ஒட்டகங்களும் சுவாமி, அம்மன் உலா நிகழ்ச்சிகளில் வலம் வந்தன.    இந்த நிலையில், மூத்த ஒட்டகம் மீனாட்சிக்கு கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

  தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை ஒட்டகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.   வலையங்குளம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் ஒட்டகம் நல்லடக்கம் செய்யப்படுமென திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.