மதுரை அருகே செவ்வாய்க்கிழமை இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் வீரபாண்டி காலனியைச் சோ்ந்த ராமன் மனைவி பொன்னுதாயி (55). இவரது கணவா் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டாா்.
இவரது மகள் திருமணமாகி ராமநாதபுரத்திலும், மகன் திருப்பூரிலும் வசித்து வருகின்றனா். தனியாக வசித்து வரும் பொன்னுதாயிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்து செல்வம் என்பவருக்கும், வீட்டின் அருகே உள்ள இடத்தை பயன்படுத்துவதில் கடந்த ஒரு மாத காலமாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் முத்துசெல்வம் மதுபோதையில் பொன்னுதாயி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வத்தின் மனைவி பஞ்சு (32) ஆகிய இருவரையம் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த பொன்னுதாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பஞ்சுவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொன்னுதாயி சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவான முத்துசெல்வத்தை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


