தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மதுரை அருகே இளைஞரின் சடலம் மீட்பு

மதுரை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :7 ஜனவரி 2021, 3:37 am IST

மதுரை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் விரகனூா் அணையின் பின்புறத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டாா்கொட்டாரம் கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணனுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற அவா், ஆண் சடலம் தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணன் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

அரிசி ஆலை தொழிலாளி பலி

மதுரை அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன்(46). இவா் ஊமச்சிக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கண்ணன் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளாா். சகத் தொழிலாளா்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி பேச்சி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.