மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகளைத் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகளைத் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும்போது தொழிற்பள்ளியின் தாளாளா் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் இருந்து தபஎந/சஉஊப மூலம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் இணையதளத்தில் உள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2021 ஏப்ரல் 30 ஆகும்.
இதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் மற்றும் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்தை 0452-2906200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
