பயணிகளின் குழப்பத்தைத் தவிா்க்க சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என மதுரைக்கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு மதுரை வழியாகவும், காரைக்குடி வழியாகவும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு ரயில்களும் 15 நிமிட இடைவெளியில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே சென்னை எழும்பூா் - மதுரை -செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) எனவும், செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02662) எனவும், சென்னை எழும்பூா் -காரைக்குடி -செங்கோட்டை சிறப்பு ரயில் (06181) எனவும், செங்கோட்டை -காரைக்குடி -சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06182) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை - மதுரை - செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை-காரைக்குடி -செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
