தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

ஜல்லிக்கட்டு: ஜன.9-இல் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு: ஜன.10 முதல் 13 வரை கரோனா பரிசோதனை

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள்

Updated On :7 ஜனவரி 2021, 3:48 am IST

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள் பதிவு செய்யும் பணி ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் முறையே ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு ஜனவரி 9 ஆம் தேதியும், காளைகளுக்கான பதிவு ஜனவரி 11 ஆம் தேதியும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறுகிறது.

இந்த பதிவுக்கு வரும் மாடுபிடிவீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 3 ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். பதிவு செய்த மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், உதவியாளா்களுக்கு அவனியாபுரத்தில் ஜனவரி 10, 11 ஆம் தேதிகள், பாலமேட்டில் ஜனவரி 11, 12-ஆம் தேதிகள், அலங்காநல்லூரில் ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் பதிவு நடைபெற்ற அதே பள்ளிகளில் கரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த இடங்கள் தவிர, அரசின் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்களில் பெறப்படும் சான்றிதழ்களும் ஏற்றுக் கொள்ளப்படும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள், மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.