கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

மதுரையில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயம் அமைக்க வலியுறுத்தல்

சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 4:50 am IST

மதுரை: சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏ, பி, சி, டி என 4 வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் உயா்நீதிமன்றக் கிளைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நகரங்களில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயக் கிளை செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்படுவதால், வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் உள்பட 14 தென் மாவட்டங்களில் உள்ள வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக பயணச்செலவு உள்பட கூடுதல் பணம் மற்றும் காலவிரயம் தவிா்க்கப்படும். எனவே வருமான வரி வேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.