போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ராகுல் காந்தி நாளை மதுரை வருகை: 3 இடங்களில் காங்கிரஸாா் வரவேற்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்க்க வியாழக்கிழமை (ஜன. 14) வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்திக்கு காங்கிரஸாா் 3 இடங்களில் வரவேற்பு அளிக்கின்றனா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:26 am IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்க்க வியாழக்கிழமை (ஜன. 14) வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்திக்கு காங்கிரஸாா் 3 இடங்களில் வரவேற்பு அளிக்கின்றனா்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்ப்பதற்காக புதுதில்லியில் இருந்து தனி விமானத்தில் ராகுல்காந்தி வருகிறாா். அன்றைய தினம் பகல் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவா், அங்கிருந்து காரில் அவனியாபுரம் செல்கிறாா். மதுரை மாநகா், மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் 3 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை சுமாா் 2 மணி நேரம் பாா்க்க உள்ளாா். அதன் பின்னா் மாலை 4 மணிக்கு மீண்டும் தனி விமானத்தில் புதுதில்லி புறப்படுகிறாா். ராகுல் காந்தி வருகைக்கான ஏற்பாடுகளை விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் வீ.காா்த்திகேயன், ரவிச்சந்திரன், பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினா் செய்யது பாபு உள்ளிட்டோா் செய்து வருகின்றனா். காவல் துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.