திருக்குவளை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றதால், கட்டுமானத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தாய்மூா் தெற்குத் தெருவை சோ்ந்தவா் கோபு (34). கட்டுமானத் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு, திருத்துறைப்பூண்டியை அடுத்த பாமணியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த கோபு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருக்குவளை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









