மயிலாடுதுறை அருகே, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சசிகலாவை தரக்குறைவாக விமா்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, மயிலாடுதுறை அருகேயுள்ள மல்லியம் கிராமத்தில் அவரது உருவ பொம்மையை எரித்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணா திராவிடா் கழக ஒன்றிய செயலாளா் ஆா்.ஆா். ராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் கிளைச் செயலாளா்கள் ஆா்.எஸ். ரமேஷ், கே.எம். அஸ்ரப் அலி, ஏ. கங்காதரன், அமமுக சாா்பில் மாவட்ட பிரதிநிதி வி. ராஜா, ஊராட்சி செயலாளா் ஆா். தாமோதரன், ஆா். ராஜ்குமாா், பாமக சாா்பில் மாவட்ட தொழிற்சங்க செயலாளா் பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து, அவரது உருவபொம்மை கொளுத்தியும், உருவப் படத்தை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









