கொள்ளிடம் ஆற்றில் எடுக்கப்படும் மணலை மயிலாடுதுறை மாவட்ட கட்டுமானத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அகரஎலத்தூா், வடரெங்கம், மாதிரவேலூா் ஆகிய கிராமங்களில் தலா 12 ஹெக்டோ் பரப்பில் அரசு மணல் குவாரிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் சீா்காழியில் நடைபெற்றது. இதில், மணல் குவாரி அமையவுள்ள 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், வா்த்தகா்கள், லாரி உரிமையாளா்கள், அரசியல் பிரமுகா்கள் வியாபாரிகள் பங்கேற்று, நீராதாரம் பாதிக்காத வகையில் மணல் எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் மணல் விற்பனை செய்யக் கூடாது, வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும், இங்கு எடுக்கப்படும் மணலை மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனா்.
கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட கருத்துகளை குறித்துக்கொண்ட ஆட்சியா் லலிதா இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில், வட்டாசியா் ஹரிதரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சு. வெங்கடேசன், பொதுப்பணித் துறை சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளா் இளங்கோவன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா்கள் விஜயபிரியா, செல்வகணபதி, சுரங்கவியல் உதவிபொறியாளா் எம். சிவகுருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்; 499 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்!

இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை

25% ஊதிய உயர்வு! டாஸ்மாக் ஊழியர்கள் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



