அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சித்த மருத்துவ முகாம்

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image

சித்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி.

Updated On :8 ஜனவரி 2021, 9:16 am IST

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்து,முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். பத்மநாதன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இந்த முகாமில், சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த மருந்துகளின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சளி, இருமல், காய்ச்சல், வலி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. சுமாா் 700-க்கும் அதிகமானோா் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனா்.

கருத்தரங்கம்...

தேசிய சித்த மருத்துவ தின மாலை நிகழ்வாக, மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, சித்த மருத்துவப் பிரிவின் பணிகளைப் பாராட்டினாா்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மற்றும் ஆயுஷ் மருத்துவா்கள் இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.