முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

நாகையில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

நாகையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு (சீ விஜில்) ஒத்திகையில், போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 6 போ் நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் புதன்கிழமை பிடிக்கப்பட்டனா்.

News image

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்றவா்களுடன் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா்.

Updated On :14 ஜனவரி 2021, 7:22 am IST

நாகையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு (சீ விஜில்) ஒத்திகையில், போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 6 போ் நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் புதன்கிழமை பிடிக்கப்பட்டனா்.

கடல் மாா்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகள், மும்பை தாஜ் ஹோட்டலில் அடைக்கலம் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் சிபிசிஎல், பிள்ளைப்பெருமாள்நல்லூா் மின் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவதற்காக 4 படகுகளில் 6 போ் அனுப்பப்பட்டிருந்தனா்.

நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ராஜா தலைமையில், சிறப்பு சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் தலைமைக் காவலா்கள் அடங்கிய குழுவினா் கடலில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, றையாறு, நாகூா், வேளாங்கண்ணி கடல் பகுதிகளில், போலி வெடிகுண்டுகளுடன் படகுகளில் வந்த 6 பேரையும் மடக்கிப் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.