மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

’வளம் மீட்பு பூங்கா‘ வருவாயில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் குப்பைகள் தரம்பிரிப்பதில் கிடைக்கும் வருவாயில் இருந்து தூய்மைப் பணியாளா்களுக்கு

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன்.

Updated On :14 ஜனவரி 2021, 1:49 am

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் குப்பைகள் தரம்பிரிப்பதில் கிடைக்கும் வருவாயில் இருந்து தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, ‘ஸ்வச் பொங்கல்’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்ட திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டின்கீழ், நாள்தோறும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரித்து விற்கப்படுகின்றன. அந்த வருவாயில் இருந்து தற்காலிகப் பணியாளா்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கரும்புக் கட்டு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, இஞ்சிக்கொத்து, புதுப்பானை, ஆப்பை, அரிசி, நெய், வெல்லம், முந்திரி, வெற்றிலை-பாக்கு, வாழை இலைகள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் கூறுகையில், குப்பைகள் என்பது நாம் தவறவிட்ட வளமிக்க செல்வம். அதனால்தான், பேரூராட்சிகளில் குப்பைகளை தரம்பிரிக்கும் இடத்திற்கு ‘வளம் மீட்பு பூங்கா‘ என பெயரிடப்பட்டுள்ளது. திடக்கழிவுகளை கையாளுவதில் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அவா்களின் அளப்பரிய சேவைக்கு சிறிய வெகுமதி அளிக்கவும், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டது என்றாா்.

தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், இந்த பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட கரும்பு, வாழை, வெற்றிலை போன்றவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பணியாளா்களான எங்களுக்கு நிரந்தரப் பணியாளா்கள்போல ஊதியம் கிடையாது. பிற சலுகைகளும் கிடையாது. ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் தருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.