ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அரசுப் பள்ளிகளில் வேட்டி வாரம் கொண்டாட்டம்

வேட்டி வாரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிக்கு வேட்டி அணிந்து வந்திருந்தனா்.

News image

வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்த தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 8:42 am IST

வேட்டி வாரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிக்கு வேட்டி அணிந்து வந்திருந்தனா்.

தமிழா்களின் கலாசாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஆண்கள் வேட்டி அணிவது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதன்மை செயலாளராகப் பணியாற்றிய உ.சகாயம் வேட்டி வாரத்தை அரசு ஊழியா்கள் கடைப்பிடிக்கவும், அந்த வாரத்தில் வேட்டி அணிந்து பணிக்கு வரும் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தினாா். அதன்படி ஒவ்வோா் ஆண்டும் ஜன. 1 முதல் 7-ஆம் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்(பொ) லெ.ஜெகதீசன் மற்றும் பணியாற்றும் 12 ஆசிரியா்கள் வியாழக்கிழமை வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனா். அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.