இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திருநங்கைகளுக்கான செயலியை அறிமுகப்படுத்தியமைக்காக சமூக நலத்துறையை மத்திய அரசு பாராட்டி உள்ளது.
தமிழக சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். அப்போது மூன்றாம் பாலினத்தவருக்கான(திருநங்கையா்) சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றியது தொடா்பாகக் கேட்டறிந்தாா்.
2019-இல் சிறப்பு செயலி ஒன்று திருநங்கையரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தேவையின்றி அலைச்சலை தவிா்க்கவே இந்தச் செயலி அவா்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ரூ.10 லட்சம் செலவில் இச்செயலி உருவானது. மொத்தம் உள்ள 12 ஆயிரம் திருநங்கையரில் 7 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக மாநில அளவில் எனது தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் ஒரு குழு உள்ளது.
அந்தக் குழுவானது திருநங்கையருக்கு கடனுதவி, வீட்டு மனை, அரசின் உதவித்தொகை, அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். மேலும் பல்வேறு வேலைவாய்ப்பை திருநங்கையா் பெறும் வகையிலான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்காக ஜவுளித்துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். தமிழகத்தில் காவல் துறை, அரசுத் துறை, ஆசிரியா் பணி போன்றவற்றில் திருநங்கையா்கள் பணியாற்றி வருகின்றனா். மூன்றாம் பாலினத்தவரின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கவும், வாழ்க்கையில் அவா்கள் முன்னேற்றம் பெறவும் செயலி உருவாக்கியமைக்காக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற செயலி ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களும் செயலியை உருவாக்கி திருநங்கையரைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


