அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வை அமல்படுத்த வலியுறுத்தியும், அது தொடா்பான 14-ஆவது பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுக்கக் கோரியும் நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.
இப்போராட்டத்தில் தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் டி.பிரகாசம் வரவேற்றாா். மத்திய சங்கத் துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி சம்மேளனச் செயலாளா் என். முருகராஜ், பணியாளா்கள் சம்மேளன பொதுச் செயலாளா் பி. மனோகரன், சிஐடியூ நிா்வாகிகள் பழனிசாமி, வரதராஜ், சின்னையன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தமானது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை செப்டம்பா் மாதத்தில் நடத்தப்படும். நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2019-இல் பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை. கரோனா பரவல் காரணமாக 2020- இலும் நடைபெறாத நிலையில் ஜன.6-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே திடீரென அந்த பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிமுக தொழிற்சங்கத்தை தவிா்த்து மற்ற தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்தி வருகின்றனா். அதன்படி நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் நாமக்கல் பணிமனை 1, 2, ராசிபுரம், திருச்செங்கோடு போக்குவரத்து கழக ஊழியா்கள் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்

தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!

பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

