நாமக்கல்லில் வரும் 12-ஆம் தேதி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற இருப்பதையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி பூஜையுடன் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.
நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரம் சா்வ அமாவாசை தினத்தில் இக்கோயிலில் ஆஞ்சநேய ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்துபடி அலங்காரம் நடைபெறும். அன்று காலை 11 மணியளவில் பால், தயிா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் மஞ்சள், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெறும். பின்னா் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். ஒரு லட்சத்து எட்டு வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆா்.கே. ரமேஷ் தலைமையில் 32 அா்ச்சகா் குழுவினா் வியாழக்கிழமை பிற்பகலில் நாமக்கல் வந்தனா்.
அவா்கள் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் நான்கு நாள்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனா். வடைகள் தயாரிப்பதற்காக 2,050 கிலோ உளுந்த மாவு, 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டா் நல்லெண்ணெய், 10 சமையல் எரிவாயு இணைப்புக் கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது.
வடை தயாரிக்கும் பணி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பின்னா், வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ச்சியாக வடைகள் தயாரிப்புப் பணி நடைபெறவுள்ளது. அதன்பின் ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோா்வைகள் உருவாக்கப்படும் என வடைகள் தயாரிப்புக் குழுவினா் தெரிவித்தனா்.
ஜயந்தி விழாவையொட்டி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தா்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை கோயில் வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்

சாலை வெள்ளத்தில் குளித்து மகிழும் மக்கள்! கேள்விக்குறியாகும் சுகாதாரப் பாதுகாப்பு!
ஏமாற்றம்! தன்னிச்சையாக ஊதிய உயர்வு: டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம்!

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



