தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவியம், சிற்பக் கண்காட்சி நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 3:31 am IST

நாமக்கல்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவியம், சிற்பக் கண்காட்சி நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது.

சேலம் மண்டலம் சாா்பில் நாமக்கல்லில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இக் கண்காட்சியை தமிழக கலை, பண்பாட்டுத் துறை ஆணையா் வ.கலையரசி தொடக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் முன்னிலை வகித்தாா். சேலம் மண்டல இயக்குநா் ஹேமநாதன், பசுமை நாமக்கல் அமைப்பின் நிா்வாகி தில்லை சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கால்கோல் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் கண்காட்சி தொடங்கியது. சென்னை, தஞ்சையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஓவியா்கள் என 20 போ் பங்கேற்று தாங்கள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினா்.

சிறந்த ஓவியங்களுக்கு முதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ. 3,500, இரண்டாம் பரிசு பெற்ற 7 பேருக்கு ரூ. 2,500, மூன்றாம் பரிசு பெற்ற 6 பேருக்கு ரூ. 1,500 வழங்கப்பட்டது. கண்காட்சியில் கல்லினால் வடிவமைக்கப்பட்ட இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.