குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழில்சங்க நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஏஐசிசிடியூ தொழில்சங்க மாநிலச் செயலாளர் சுப்பிரமணி, சிஐடியூ நாமக்கல் மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் கோரிக்கையினை விளக்கிப் பேசினர்.
ஏஐடியூசி நாமக்கல் மாவட்டத் தலைவர் மாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி, சிஐடியூ நகரச் செயலாளர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு விசைத்தறிகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தரப்பட்ட 8 விழுக்காடு மட்டுமே தரமுடியும் என தெரிவிக்கப்பட்டது.
எனவே, 20 சதவீதம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட்..! 6ஆவது இடத்தில் ஷுப்மன் கில்!
12த் பெயில் நாயகனின் புதிய இணையத் தொடர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சந்தீப் கிஷனின் சூப்பர் சுப்பு இணையத் தொடர் நாளை வெளியீடு!

தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை! மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS



