ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஒடுக்கப்பட்டோருக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது: தில்லி பாஜக குற்றச்சாட்டு

ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக மத்திய அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை தில்லியில் அறிமுகப்படுத்த விடாமல், தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 11:20 pm IST

ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக மத்திய அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை தில்லியில் அறிமுகப்படுத்த விடாமல், தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பான செய்தியாளா் சந்திப்பு தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், பாஜகவின் தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கெளதம், வடமேற்கு தில்லி பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், தில்லி பாஜக ஒடுக்கப்பட்டோா் பிரிவு தலைவா் ராஜ்குமாா் புல்வாரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துஷ்யந்த் கெளதம் பேசுகையில் ‘ ஒடுக்கப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் மேல் படிப்பு படிக்கும் வகையில், உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமாா் 5 கோடி மாணவா்கள் பயன்பெறுவாா்கள். இதற்காக, ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை தில்லியில் இதுவரை தில்லி அரசு அமல்படுத்தவில்லை. இதனால் தில்லியில் பல லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாணவா்கள் வாழ்க்கையில் தில்லி அரசு அரசியல் செய்கிறது என்றாா்.

ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பேசுகையில் ‘பாபா சாகேப் அம்பேத்கரின் வழியில் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், அத்திட்டங்களை தில்லியில் அமல்படுத்தாமல் தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த விவகாரத்தில் தில்லி அரசு நலிவான அரசியல் செய்வதை விடுத்து இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.