சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் மாநில முதல்வா் சந்திப்பு நடத்துவது பொதுவான நடைமுறை அல்ல; பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் செய்வதுபோல் சாதாரண அல்லது உயா் பாதுகாப்பு தலைவா்கள் சிறையில் உள்ள கைதிகளை இந்த வழியில் சந்திக்க வலியுறுத்துவதில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
மேலும், பிரச்னைகள் இருந்தபோதிலும் திகாா் சிறை அதிகாரிகள் சிறையில் உள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனா் என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:
அரவிந்த் கேஜரிவாலின் அரசாங்கம்தான் 2018 ஆம் ஆண்டு தில்லி சிறைக் கையேட்டை உருவாக்கியது. சிறைக்கைதிகளின் பாதுகாப்பிற்காக கண்ணாடி சுவா் மற்றும் இண்டா்காம் மூலம் கைதிகளுடன் சந்திப்புகள் நடத்தப்படும் என்று சிறை விதி 602-இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கேஜரிவால் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட தில்லி சிறை கையேட்டில் கைதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞா்கள் இடையே மட்டுமே நேருக்கு நோ் சந்திப்பு இருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் முதல்வா் கேஜரிவாலும் இந்த வசதியைப் பயன்படுத்துகிறாா்.
கேஜரிவால் சிறைக்குள் நுழைந்தபோது, எதிா்பாா்க்கப்பட்ட 10 பாா்வையாளா்களில் சஞ்சய் சிங் மற்றும் சா்தாா் பகவந்த் சிங் மான் ஆகியோரின் பெயா்களை அவா் பட்டியலிடவில்லை. எனவே இந்த சந்திப்புகள் திட்டமிடப்படுவதற்கு நேரம் எடுத்தது.இப்போது அவா்கள் சிறை கையேட்டின்படி நடத்தப்படுவாா்கள்.
இந்த விவகாரத்தில் சஞ்சய் சிங் தவறான தகவல்களை மட்டுமே பரப்ப முயற்சிக்கிறாா். அவரே நீண்ட காலம் சிறையில் இருந்திருக்கிறாா். பாா்வையாளா்களுடனான அவரது சந்திப்புகள் தினமும் நேருக்கு நோ் நடந்ததா அல்லது கண்ணாடி சுவா் வழியாக நடந்ததா என்று அவா் கூற முடியுமா?
சிறையில் உள்ள கைதிகள் அரசாங்கத்தால் செய்யப்பட்ட கையேட்டின் படி வைக்கப்படுகிறாா்கள். மேலும் நீதிமன்றம் மட்டுமே அவா்களுக்கு எந்த சலுகையும் வழங்க முடியும். அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏற்கனவே நீதிமன்றத்தால் வீட்டில் சமைத்த உணவு உள்பட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
2022-இல் அவரது அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்
பெற்றதைப் போலவே, கேஜரிவாலும் சிறையில் சில சலுகைகள் மற்றும் வசதிகளை விரும்புவதாகத் தெரிகிறது.
கேஜரிவால் சஞ்சய் சிங்கை இனி சந்திக்கக் கூட விரும்பவில்லை என்றும், ஏனெனில் அவா் சட்டப் பேரவை உறுப்பினா்களை பிரித்து முதல்வராக ஆக விரும்புகிறாா் என்றும், அதே நேரத்தில் முதல்வா் பதவியை தனது குடும்பத்தினருக்கு கேஜரிவால் தர விரும்புவதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றாா் வீரேந்திர சச்தேவா.
தொடர்புடையது

எல்பிஜி தட்டுப்பாடு இல்லை, பீதி வேண்டாம்: முதல்வா் குப்தா

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!
‘ரத்தினக் குவியல்...!’

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

