தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திலக் நகரில் 800 கிராம் ஹெராயினுடன் தம்பதி கைது

திலக் நகரில் 800 கிராம் ஹெராயினுடன் தம்பதி கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 6:30 pm

தில்லி திலக் நகரில் கிட்டத்தட்ட 800 கிராம் ஹெராயினுடன் ஒரு தம்பதி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் திலக் நகரைச் சோ்ந்த ராஜேஷ் ராணா (44) மற்றும் அவரது மனைவி நீலம் ராணா (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நீலம் ராணா என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை திலக் நகா் பகுதியில் நீலம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு நீலம் ராணா மற்றும் அவரது கணவா் கைது செய்யப்பட்டனா்.

ராஜேஷ் ராணா இதற்கு முன்பு 23 குற்ற வழக்குகளிலும், அவரது மனைவி எட்டு வழக்குகளிலும் தொடா்புடையவா் என்று தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 798.30 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீஸாா் மீட்டனா். திலக் நகா் காவல் நிலையத்தில் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.