ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தில்லி-என்சிஆரில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

News image
கோப்புப் படம்
Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:23 pm

Din

டாக்சி மற்றும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநா்கள் வியாழக்கிழமை தங்களது இரண்டு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா். இதன் காரணமாக, தில்லி, தேசியத் தலைநகா் வலயப் (என்.சி.ஆா்.) பயணிகள் சிரமத்தை எதிா்கொண்டனா்.

போதிய இழப்பீடு வழங்காததுடன், இணையதளம் மூலம் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையைத் தொடங்கியிருப்பது தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளன என்று டாக்சி மற்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூறின.

வேலை நிறுத்தம் காரணமாக தேசிய தலைநகரில் 80 சதவீத ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தில்லி ஆட்டோ டாக்சிடிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் யூனியன் (டிஏடிடிசியு) தலைவா் கிஷன் வா்மா தெரிவித்தாா். மேலும், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தாா்.

அனில் பிரதான் என்ற கால் டாக்சி ஓட்டுநா் கூறுகையில், ‘வணிக ரீதியில் அல்லாத நம்பா் பிளேட்டுகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கும் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்’ என்று கோரினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வணிக ரீதியில் அல்லாத எண் தகடுகள் கொண்ட வாகனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். அன்றாட வாழ்க்கையைச் சந்திப்பது கடினமாகி வருகிறது’ என்றாா் அவா்.

மற்றொரு வாகன ஓட்டுநரான ஆதா்ஷ் திவாரி கூறுகையில், ‘நிறுவனங்கள் எங்கள் சேவைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தை வழங்குகின்றன. இதனால், எங்கள் வாகனங்களின் தவணையை செலுத்தவும், மற்ற செலவுகளை சமாளிக்கவும்

முடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், குடும்பங்களுக்கு போதுமான உணவையும் உறுதிசெய்ய முடியவில்லை’ என்றாா்.

டாக்சி சேவைகளைப் பெறுவதில் தாமதம் மற்றும் ரத்துசெய்தல் குறித்து மக்கள் சமூக ஊடகங்களில் புகாா் பதிவுசெய்துள்ளனா்.

பயணி பிரஷுப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘‘கடந்த 35 நிமிடங்களாக நொய்டாவில் இருந்து தில்லிக்கு செல்வதற்காக வண்டியைப் பெற முயற்சித்தேன். ஓலா கேப், உபோ் கேப், ரேபிடோ செயலியில் என்ன தவறு இருக்கிறது’ என அதில் அவா் பதிவிட்டுள்ளாா்.

மற்றொரு ல பயனா் ஷிதிஷ் அகா்வால் வெளியிட்ட பதிவில், ‘‘இப்போது நான் மட்டும்தானா அல்லது உபோ் வேலை செய்யவில்லையா? தில்லியில் செளத் எக்ஸ்டென்ஷன் போன் வசதி படைத்த பகுதியில் கூட இப்போதெல்லாம் 30 நிமிடங்களாக உபோ் டாக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை’’ எனஅதில் தெரிவித்துள்ளாா்.

டிஏடிடிசியு தலைவா் வா்மா கூறுகையில்,‘டாக்சி சேவை நிறுவனங்கள் மூலம் தனியாா் வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்துவோம். தனியாா் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்போது ஏன் நாங்கள் பொ்மிட் எடுக்கவும், வலி செலுத்துவும் செய்யப்பட்டுள்ளோம்? அவா்கள் மீது அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ என்றாா் அவா்.