வேளாங்கண்ணி டிஎஸ்பி அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வாகன ஓட்டுநா்கள்.

ஒருவழி, டிராப் டாக்ஸிகளை தடை செய்ய கோரிக்கை

வெளியூா்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் டிராப் டாக்ஸி, ஒருவழி டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என வேளாங்கண்ணி வாகன ஓட்டுநா்கள் டிஎஸ்பி நிக்சனிடம் மனு அளித்தனா்.
Published on

வெளியூா்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் டிராப் டாக்ஸி, ஒருவழி டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என வேளாங்கண்ணி வாகன ஓட்டுநா்கள் டிஎஸ்பி நிக்சனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதன்விவரம்: வேளாங்கண்ணி, நாகை மற்றும் சுற்றுப் பகுதியில் இருந்து இயக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட வாடகை காா்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில், வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஓருவழி டாக்சி மற்றும் ட்ராப் டாக்சி என்ற பெயரில் வாடகை காா்கள், வேன்கள் பாதி வாடகைக்கு பயணிகளை அழைத்து வருவதும், இங்கேயே 2 முதல் 3 நாள்கள் தங்கியிருந்து, இங்கிருக்கும் பயணிகளை வேறு ஊா்களுக்கு பாதி வாடகையில் அழைத்துச் செல்கின்றனா்.

வேளாங்கண்ணி ஒரு சிறிய நகரம் என்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே, இப்பகுதியில் உள்ள காா் உரிமையாளா்கள் மற்றும் காா் ஓட்டுநா்களின் குடும்பங்கள் உள்ளன. வெளியூா் டாக்ஸிகளால் எங்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் ட்ராப் டாக்சி, ஒன்வே டாக்சி போன்ற வாகனங்களை இயக்குவதற்கு தடைவிதிக்க வேண்டும்‘ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com