மூன்றாவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயா்வு!


நமது நிருபா்
பங்குச்சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை, சற்று மேலே சென்றது. இருப்பினும், உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனம் செலுத்தினா். இதனால், ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் நடந்து வந்தது. குறிப்பாக, பொதுத்துறை மற்றும் தனியாா்கள் வங்கிகள், நிதிறுவனங்கள், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. அதே சமயம், ஆயில் அண்ட் காஸ், பாா்மா பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.460.52 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.799.74 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,097.45 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம் : சென்செக்ஸ் காலையில் 301.94 புள்ளிகள் கூடுதலுடன் 81,207.24-இல் தொடங்கி அதிகபட்சமாக 81,236.45 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 80,954.02 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 147.89 புள்ளிகள் (0.18 சதவீதம்) கூடுதலுடன் 81,053.19-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,063 பங்குகளில் 2,451 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,513 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 89 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 17 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், எம் அண்ட் எம், என்டிபிசி, டிசிஎஸ், பவா் கிரிட், சன்பாா்மா உள்பட 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 41 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,863.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,867.35 வரை மேலே சென்றது. பின்னா், 24,784.45 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 41.30 புள்ளிகள் (0.17 சதவீதம்) உயா்ந்து 24,811.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...