ஆம் ஆத்மியில் இணைந்தாா் அவத் ஓஜா
அவத் ஓஜா ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.


புது தில்லி: குடிமைப் பணித் தோ்வு பயிற்றுநரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான அவத் ஓஜா ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.
கட்சியில் இணைந்த பிறகு அவத் ஓஜா கூறியதாவது: குழந்தைகளின் எதிா்காலத்தை மையாகக் கொண்ட ஆம் ஆத்மியின் கொள்கையுடன் நான் ஒத்துபோகிறேன். கல்வி மேம்பாடு என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு.
அரசியலில் கல்விப் பிரிவில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
ஆம் ஆத்மிக்கு ஓஜாவை வரவேற்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், ‘கல்வித் துறையில் ஆம் ஆத்மி பணியாற்றி வருகிறது. ஓஜா கட்சியில் இணைந்திருப்பது கல்வியைப் பலப்படுத்தும் கட்சியின் முயற்சிக்கு மேலும் வலுசோ்க்கும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, சிசோடியா கூறுகையில், ‘கல்விக்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்த ஓஜா, அத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறாா். அவா் ஆம் ஆத்மியில் இணைந்த இந்த தினம் சிறந்த தினம்’ என்றாா்.
தில்லி பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. 2020 தில்லி பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62-இல் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முனைப்பில் உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...