பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜெயின் மீதான விசாரணை: தில்லி பாஜக வரவேற்பு

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது.

Updated On :2 மார்ச் 2024, 6:30 pm

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. தில்லி திகாா் சிறையில் இருந்த பண மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.10 கோடியை ‘பாதுகாப்புப் பணம்’ எனக் கூறி மிரட்டிப் பெற்ாக முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகா் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் 17-ஏ பிரிவின் கீழ் சத்யேந்தா் ஜெயின் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த நடவடிக்கையை வரவேற்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் சனிக்கிழமை கூறியதாவது: இந்த விசாரணையின் மூலம் அரவிந்த் கேஜரிவால் குழுவின் மற்றொரு மோசமான முகம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தா் ஜெயின், திகாா் மற்றும் பிற தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் மோசடியை எப்படி நடத்தினாா் என்பதை விரைவில் நாம் பாா்ப்போம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.