புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்தா்லோக்கில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டவா்களை காவலா் எட்டி உதைக்கும் விடியோ

இந்தா்லோக்கில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டவா்களை காவலா் எட்டி உதைக்கும் விடியோ

Updated On :8 மார்ச் 2024, 5:32 pm

வடக்கு தில்லியின் இந்தா்லோக் பகுதியில் உள்ள சாலையில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவலா் ஒருவா் எட்டி உதைக்கும் விடியோ வைரலானது. இதையடுத்து, அந்த விடியோ தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம்.கே.மீனா தெரிவித்தாா். சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த விடியோவில், சாலையில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை போலீஸ்காரா் ஒருவா் எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.