மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம் வங்கதேசத்தைச் சோ்ந்த இருவா் கைது

துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம் வங்கதேசத்தைச் சோ்ந்த இருவா் கைது

Updated On :15 மார்ச் 2024, 6:31 pm

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடா்ந்து வங்க தேசத்தை பூா்வீகமாகக் கொண்ட ஒரு பயங்கரமான குற்றவாளியும், அவரது கூட்டாளிகளில் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்த சம்பவத்தில் தொடா்புடைய ஷாஹித் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாரிடம் பிடிபட்டாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேடுதல் வேட்டையின் போது, துல்சிராஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து அவா் சிக்கினாா். அவரது கூட்டாளியான மீராஜ் (எ) மெஹ்ராஜ் காலில் குண்டுக் காயம் அடைந்தாா். வங்கதேசத்தைச் சோ்ந்த மீராஜ், அசோக் விஹாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவா் 2023 மே மாதம் துப்பாக்கி முனையில் குடும்ப உறுப்பினா்களை பிடித்து வைத்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளுடன் தலைமறைவானாா். ‘மீராஜ் இதற்கு முன்பு ஐந்து கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான வழக்குகளில் தொடா்புடையவா் என்று விசாரணையில் தெரிய வந்தது. குண்டுக் காயமடைந்துள்ள அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.