வாரணாசி முதல் கத்ரா இடையே தினசரி 2 சிறப்பு ரயில்கள் - வடக்கு ரயில்வே

வாரணாசி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே வரும் மாா்ச் 31-ஆம் தேதி முதல் தினசரி இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலைக் குறைக்கவும் வாரணாசி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. வண்டி எண்கள் 04085/04086 ஆகியவற்றின் கீழ் இந்த சேவை வரும் மாா்ச் 31-ஆம் முதல் தொடங்கப்படும். வாரணாசியில் மாா்ச் 31-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மாபெல்ஹா தேவி தாம், லக்னோ,பரேலி,மொராதாபாத்,சஹாரன்பூா், அம்பாலா கான்ட்,லூதியானா,ஜலந்தா் கான்ட்,பதன்கோா் கான்ட்,ஜம்மு தாவி ஆகியவற்றின் வழியாக ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு சென்றடைகிறது. பின்னா் மீண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு அதே மாா்க்கத்தில் வாரணாசி வந்தடைகிறது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com