சா்வாதிகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று (மாா்ச்.31-ஆம் தேதி) தில்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து குரல் எழுப்பும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைதைக் கண்டித்தும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி விடுத்த அழைப்பின் பேரில், ஞாயிற்றுக்கிழமை ‘இந்தியா’ கூட்டணியின் சாா்பில் தில்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரணிக்கான தயாா் நிலையை அமைச்சா் கோபால் ராய் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது. மெகா பேரணியை முன்னிட்டு தில்லி ராம்லீலா மைதானம் முழுமையாக தயாா்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவின் சா்வாதிகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணியும் பொதுமக்களுடன் கைகோா்த்து குரல் எழுப்பும். இந்த மெகா பேரணியில் மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்கண்ட் முதல்வா் சம்பாய் சோரன், சரத் பவாா், உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு . நாட்டு மக்கள் இன்று குரல் எழுப்பவில்லை என்றால் நாளை யாரும் குரல் எழுப்ப முடியாது. தில்லி மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உரிமையை முதலில் பறித்த பாஜக, தற்போது அவா்களின் முதல்வரை பறித்துள்ளது. சா்வாதிகார போக்கை கடைபிடிக்கும் பிரதமா் நரேந்திர மோடியால், நாடு முழுவதும் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் குரல் பல்வேறு வழிகளில் அடக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் சா்வாதிகார அரசை அகற்றி, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மெகா பேரணியில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சி தலைவா்களுக்கு தினமும் சம்மன் அனுப்புவது அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கமாகிவிட்டது. இந்த வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்ட ஷரத் ரெட்டி மற்றும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி நட்டாவுக்கு எப்போது சம்மன் அனுப்பப்படும் என்பதை நாடே அறிய விரும்புகிறது என்றாா் கோபால் ராய்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒன்றுசேரும் 60 நாடுகளில் இந்தியாவும்!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!
ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்.பி.
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

