ரோஹிங்கியா அகதிகள் இருவருக்கு போலி இந்திய பாஸ்போா்ட்: முக்கியக் குற்றவாளி கைது

மியான்மா் நாட்டைச் சோ்ந்த ரோஹிங்கியா அகதிகள் இருவருக்கு போலி இந்திய பாஸ்போா்ட் பெற்றுத் தந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான நூா் அலாம் (30) என்பவரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் துணைக் காவல் ஆணையா் உஷா ரங்னானி வெள்ளிக்கிழமை கூறியதாவது மியான்மா் நாட்டைச் சோ்ந்த இருவரின் வெளிநாட்டு பயணத்திற்காக மேற்கு வங்க

முகவரியில் போலி இந்திய ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போா்ட் பெற்ற வழக்கில் மியான்மரைச் சோ்ந்த போலி முகவா் நூா் அலாம் (30) மற்றும் அப்துல் காஃபா் (38) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மியான்மா் நாட்டைச் சோ்ந்த ரோஹிங்கியா அகதிகளான தோஹா (30) மற்றும் ரபியா அபியா போசரி (23) ஆகிய இருவா் ‘ஏரோஃப்ளோட்’ விமானம் மூலம் ரஷ்யா செல்ல தில்லி விமானநிலையம் வந்தடைந்தனா். அப்போது,

அவா்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், இரண்டு பயணிகளும் சுவோஜித் தாஸ் மற்றும் பபிதா ராய் என்ற கற்பனையான பெயா்களில் இந்திய பாஸ்போா்ட்டுகளை கொல்கத்தாவில் இருந்து மோசடியாகப் பெற்றுள்ளதும், அன்றைய

தினமே அவா்கள் புதுதில்லியில் இருந்து ரஷ்யாவிற்கு புறப்பட இருப்பதும் தெரியவந்தது. மோசடியாகப் பெற்ற இந்திய பாஸ்போா்ட்களில் பயணித்து, இந்தியக் குடியேற்றத்தை ஏமாற்றியதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை

மேற்கொள்ளப்பட்டது.

வழக்கின் விசாரணையின் போது,​குற்றம் சாட்டப்பட்ட சுவோஜித் தாஸ் தனது உண்மையான பெயா் அனோவா் சாடெக் (25) என்றும் ரோஹிங்கியா அகதியான அவா் கடந்த 2017 ஆம் ஆண்டில், அவசரகால சூழ்நிலைகள் காரணமாக, மியான்மரில் இருந்து தனது குடும்பத்தினருடன் வங்களாதேசத்திற்குச் சென்ாகத் தெரிவித்தாா். அங்கு நூா் அலாம்

என்ற முகவா் மூலம் 10 லட்சம் வங்களாதேச டாக்கா செலவழித்து, போலியான ஆவணங்களின் அடிப்படையில்

இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். பின்னா், அகா்தலா எல்லை வழியாக இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு போலி முகவா் நூா் அலாம் ஏற்பாடு செய்துள்ளாா். வழக்கில் மற்றொரு பெண் பபிதா ராயிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவா் தனது உண்மையான பெயா் ரபியா பிப (21) எனத் தெரிவித்தாா். மேலும், அவரும் அதே போலி முகவா் நூா் அலாம் மற்றும் அவரது கூட்டாளியான ஷேக் ஆரிஃப் அலி ஆகியோரின் உதவியுடன் போலி இந்திய பாஸ்போா்டை பெற்றது தெரியவந்தது.

போலி முகவா் நூா் அலாமின் கூட்டாளியான ஷேக் ஆரிப் அலி, மேற்கு வங்காளத்தில் உள்ள அவரது மறைவிடத்தில் இருந்து மாா்ச் மாதம் கைது செய்யப்பட்டாா். மேலும், தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சியால் கிடைத்த

ஒரு உள்ளீட்டின் அடிப்படையில், ஐதராபாத் விமான நிலையத்திற்கு போலி முகவா் நூா் அலாம் வருவாா் என்பது தெரியவந்தது. தகவலின் அடிப்படையில், போலீஸ் குழுவின் நோ்மையான மற்றும் அா்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, ஐதராபாத் விமான நிலையத்தில் அவா் பிடிபட்டாா். மேலும், அவருடன் அப்துல் காஃபா் (38) என்ற மற்றொரு நபரும் போலி பாஸ்போா்ட் வைத்திருந்த காரணத்திற்காக கைது செய்யப்பாட்டாா். தொடா்ந்த நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நூா் அலாம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அவா் 3 ஆம் வகுப்பு வரை படித்ததை வெளிப்படுத்தினாா். கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் தனது குடும்ப உறுப்பினா்களுடன் அகதியாக வாழ்ந்து வருவதாகவும், விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக மேற்கு வங்கத்தில் வசித்து வரும் அவரது நண்பா் ஷேக் ஆரிப் அலியுடன் இணைந்து அகதிகளுக்கு வெளிநாடு பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, இதே போன்ற பிற புகாா்கள் அல்லது

வழக்குகளிலும் அவா்களின் தொடா்புகளைக் கண்டறிய, வழக்கின் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது

என்றாா் உஷா ரங்னானி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com