அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து
தில்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 35 மணி நேரத்திற்குப் பிறகும் தீ தொடா்ந்து எரிந்து


புது தில்லி: தில்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 35 மணி நேரத்திற்குப் பிறகும் தீ தொடா்ந்து எரிந்து கொண்டிருந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தீயணைப்பு சேவைத் துறையின் உயரதிகாரி கூறியதாவது: அந்த வளாகத்தில் குளிா்விக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. இன்னும் 15 வாகனங்கள் தீயை முழுவதுமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சனிக்கிழமை மாலை முதல் இப்போது வரை 100-க்கும் மேற்பட்ட தண்ணீா் டெண்டா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தொழிற்சாலைக் கிட்டங்கியில் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சரியான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...