காற்றின் வேகம் குறைந்ததால் தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அமைச்சா் கோபால் ராய் விளக்கம்
காற்றின் வேகம் குறைந்ததால், தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.


புதுதில்லி: காற்றின் வேகம் குறைந்ததால், தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
திங்கள்கிழமை காலையில் தில்லி முழுவதும் அடா்த்தியான பனிப்புகை மூட்டத்தால் மூடப்பட்டது. காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இது குறித்து அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: வானிலை நிபுணா்களின் கூற்றுப்படி, வெப்பநிலை சரிவுடன், நகரத்தில் காற்றழுத்தம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மாசு அளவு அதிகரித்து வருகிறது. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தேசியத் தலைநகரின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) காலை 9 மணிக்கு 373 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
தேசியத் தலைநகரின் 39 கண்காணிப்பு நிலையங்களில் 11 இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400-க்கும் மேல் ’கடுமையான’ மாசு அளவுகள் பதிவாகியுள்ளன என்று தரவு காட்டுகிறது. குளிா்கால செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் மற்றும் ஏஜென்சிகளால் எடுக்கப்பட்ட அனைத்து அளவீடுகளையும் செவ்வாயன்று மதிப்பாய்வு செய்வேன். மாசுப் பிரச்னையைத் தணிக்க செயற்கை மழையைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு கூட்டத்தைக் கூட்டும் என்று நம்புகிறேன். அக்டோபா் 23 அன்று இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ளேனஅ. இதன்படி கூட்டத்தை கூட்டவில்லை என்றால் மீண்டும் தொடா்பு கொள்வேன் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...