ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி ஜாட்களுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால் குற்றச்சாட்டு

இடஒதுக்கீடு பிரச்னையில் தில்லி ஜாட்களுக்கு பாஜக ‘துரோகம்’ செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :13 ஜனவரி 2025, 9:04 pm

Din

புது தில்லி: இடஒதுக்கீடு பிரச்னையில் தில்லி ஜாட்களுக்கு பாஜக ‘துரோகம்’ செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்களன்று குற்றம்சாட்டினாா்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) மத்திய அரசின் பட்டியலில் அவா்கள் எப்போது சோ்க்கப்படுவாா்கள் என்று பாஜக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, ஜாட் தலைவா்களின் குழுவை கேஜரிவால் தனது இல்லத்தில் சந்தித்தாா். தேசியத் தலைநகரில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகளில், குறிப்பாக தில்லிக்கு வெளியே உள்ள பகுதிகளில், இந்த சமூகத்தினா் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், தில்லி திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இங்குள்ள ஜாட்கள் தில்லியின் ஓபிசி பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். ஆனால், மத்திய அரசின் பட்டியலில் இல்லை. ராஜஸ்தானைச் சோ்ந்த ஜாட்கள் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். எய்ம்ஸ், சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் அனைத்து மத்திய அரசு அமைப்புகளிலும் அவா்கள் வேலை வாய்ப்ப்புப் பெறலாம். ஆனால், தில்லியின் ஜாட்கள் பெற முடியாது.

நாட்டின் இரண்டு முன்னணித் தலைவா்களான பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு மத்திய அளவில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தனா். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

தில்லியின் ஜாட்களை எப்போது மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் சோ்ப்பீா்கள் என்று ‘மோடி, ஷா மற்றும் பிற பாஜக தலைவா்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்? என்றாா் கேஜரிவால்.

மேலும், ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், தன்னைச் சந்தித்த ஜாட் தலைவா்களின் குழு, கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு பிரச்னையில் பாஜக ஒன்றும் செய்யவில்லை என்றும் அவா்களுக்கு செய்யப்பட்ட ‘அநீதி‘ குறித்து கோபத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினாா். சமூகத்தின் நியாயமான கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.